CRICKETLATEST UPDATESNEWSTAMIL
2-வது டி20: பாகிஸ்தானை 9 விக்கெட்டில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து
நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் ஏமாற்றம் அளிக்க, அனுபவ வீரரான முகமது ஹபீஸ் ஆட்டமிழக்காமல் 10 பவுண்டரி, 5 சிக்சருடன் 99 ரன்கள் விளாசினார். இவர் மட்டுமே சிறப்பாக விளையாடியதால் பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சவுத்தி 4 ஓவரில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னார் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர் மாரட்டின் கப்தில் 21 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து டிம் செய்பெர்ட் உடன் கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி விக்கெட் இழக்காமல் 19.2 ஓவரில் 164 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி றெ வைத்தது.
செய்பெர்ட் 63 பந்தில் 84 ரன்களும், கேன் வில்லியம்சன் 42 பந்தில் 57 ரன்களும் விளாசினர். ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து 2-0 எனக் கைப்பற்றியது. 3-வது மற்றும் கடைசி போட்டி 22-ந்தேதி நேப்பியரில் நடக்கிறது.