TAMIL
வீட்டுச் செல்லப் பிராணிகளைக் குளிப்பாட்டும் ஹர்திக் பாண்ட்யா

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா லாக்டவுன் நாட்களை தன்னுடைய வருங்கால மனைவி நடாசாவுடன் கழித்து வருகிறார்.
கிரிக்கெட்வீரர் ஹர்திக் பாண்ட்யா நடிகை நடாசா ஆகிய இருவரும் தொடர்ச்சியாக போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
ஒன்றாக உடற்பயிற்சி செய்வது முதல் சமைக்கும் வீடியோ மற்றும் இருவருக்கும் இடையான உரையாடல் வரை அனைத்தையும் ஹர்திக் மற்றும் நடாசா பகிர்ந்து வருகிறார்கள்.
நடாசாவின் சமீபத்திய பதிவில், அவர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் க்ருணால் பாண்ட்யாவின் மனைவியுடன் சேர்த்து வீட்டில் உள்ள செல்லப் பிராணிகளைக் குளிப்பாட்டும் வீடியோ வைராலாகி உள்ளது.
கடந்த வாரம், ஹர்திக் பாண்ட்யா வெளியிட்ட வீடியோ மிகவும் வைரலானது. அதில் அவர் நடாசாவிடம், “பேபி, நான் யார் உனக்கு” என்று கேட்கிறார். அதற்கு அவர், “ என் இதயத்தின் ஒரு பகுதி,” என்று பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.