TAMIL
‘வீட்டிலே இருங்கள்’ பிரித்தானியா அரசு உத்தரவு! ஆர்ச்சர் வெளியிட்ட மிகவும் வேடிக்கையான வீடியோ
வீட்டிலே இருங்கள் என பிரித்தானியா உத்தரவிட்டதை அடுத்து இங்கிலாந்து நட்சத்திர பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வெளியிட்ட டிக் டாக் வீடியோ வைரலாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பிரித்தானியா அரசு நாடு முழுவதும் 3 வாரங்கள் ஊரடங்கு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, மே 28ம் திகதி வரை நாட்டில் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இந்நிலையில் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனின் உத்தரவை அடுத்து விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மிகவும் வேடிக்கையான கிரிக்கெட் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
வீடியோவில், கிரிக்கெட் விளையாட இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் ஜெர்சியை அணிந்து கையில் துடுப்பு தலையில் தலைகவசத்துடன் வீட்டின் கதவை திறக்க முயல, எச்சரிக்கை ஒலி அடிக்கிறது.
இதைக்கேட்ட உடன் வந்த வழியே ஆர்ச்சர் திரும்பி செல்கிறார்.
கொரோனா தடுக்க அரசு விதித்துள்ள உத்தரவு குறித்து மக்களிடையே
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆர்ச்சர் வெளியிட்டுள்ள வீடியே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
Nice video @JofraArcher pic.twitter.com/WAe1Rt5s0q
— Diya hasan (@jimmy9fan) March 25, 2020