TAMIL

விளையாட்டு துளிகள்……

•பந்தை எச்சிலால் தேய்க்க தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்து பேசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, ‘சிவப்பு பந்தை எங்களால் பளபளப்பாக்க முடியாவிட்டால், பந்து ‘ஸ்விங்’ ஆகாது.

அதன் பிறகு உண்மையிலேயே பேட்ஸ்மேன்களுக்கு எளிதாகி விடும்.

போட்டி இரு தரப்புக்கும் (பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்) சரிசம சவாலாக இருக்க வேண்டுமே தவிர, பேட்ஸ்மேன் மட்டும் ஆதிக்கம் செலுத்தும் வகையில் இருந்து விடக்கூடாது’ என்றார்.

•ஆஸ்திரேலிய நாட்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தியுள்ள அந்த நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன், அடுத்த மாதத்தில் இருந்து விளையாட்டு ஸ்டேடியத்தில் 25 சதவீதம் ரசிகர்களை அனுமதிக்கலாம். அதாவது ஸ்டேடியம் 40 ஆயிரம் இருக்கை வசதி கொண்டது என்றால் 10 ஆயிரம் ரசிகர்கள் வரை உள்ளே அனுமதிக்கலாம் என்று கூறியுள்ளார். இதனால் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்த ஆண்டு இறுதியில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் போது ரசிகர்கள் முன்னிலையில் களம் காணும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker