CRICKETIPL TAMILLATEST UPDATESNEWSTAMIL
விராட் கோலி 200-வது சிக்சர்: டாப் 5-ல் 3 இந்தியர்கள்

சி.எஸ்.கே.வுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி ஒரு சிக்சர் அடித்தார். ஐ.பி.எல் போட்டியில் அவரது 200-வது சிக்சர் ஆகும். 180-வது இன்னிங்சில் அவர் இதை எடுத்தார்.
200-வது சிக்சர் அடித்த 5-வது வீரர் விராட் கோலி ஆவார். இந்திய வீரர்களில் டோனி, ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக இருக்கிறார்.
ஐ.பி.எல். போட்டியில் 200 சிக்சர்களுக்கு மேல் அடித்த வீரர்கள் வருமாறு:-
1. கிறிஸ் கெய்ல் – 336 சிக்சர்
2. டிவில்லியர்ஸ் – 231
3. டோனி – 216
4. ரோகித் சர்மா – 209
5. விராட் கோலி – 200