TAMIL
வார்னரின் சவாலை ஏற்று மொட்டையடிப்பாரா கோலி?
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர், மொட்டை அடித்து கொரோனாவினால் பாதிக்கப்பட்டோருக்காக பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
தலைமுடியை மழிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக மொட்டையடிக்கும்படி பரிந்துரைக்கப்பட்டதால் இதை செய்கிறேன்.
கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகம் ஆன போது இதை செய்தேன் என்று நினைக்கிறேன். இது உங்களுக்கு பிடித்திருக்கிறதா? இல்லையா?’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் சுமித், கம்மின்ஸ், ஸ்டோனிஸ், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆகியோரும் இதே பாணியில் ஆதரவு அளிக்க மொட்டையடிக்கும்படி வார்னர் சவால் விடுத்துள்ளார்.
அவரது சவாலை கோலி ஏற்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.