TAMIL
வரலாற்று வெற்றியை இந்திய அணி பெற்ற போது சூதாட்டத்தில் ஈடுபட்ட இளைஞன்!
இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுபயணம் செய்து விளையாடி வரும் நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 -0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று வரலாறு சாதனை படைத்துள்ளது.
இந்த போட்டிகளின் போது கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக பெங்களூரு குற்றப்பிரிவு பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பழைய தரகுப்பேட்டையில் உள்ள ஹொட்டல் முன்பு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வாலிபரை பொலிசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது அந்த வாலிபர் பெங்களூரு ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த ராகேஷ் ஜெயின் (26) என்பதும், இவர் இந்தியா-நியூசிலாந்து
கிரிக்கெட் போட்டியின்போது வெற்றி யாருக்கு என்பது குறித்து செல்போனில் சூதாட்ட தரகர்களுடன் தொடர்பு கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து ராகேஷ் ஜெயினை பொலிசார் கைது செய்தத்தோடு அவரிடம் இருந்து ரூ.1½ லட்சம் ரொக்கம், சூதாட்டத்திற்கு பயன்படுத்திய செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்