TAMIL
வங்காளதேச பேட்மிண்டன்: லக்ஷயா சாம்பியன்
வங்காளதேச சர்வதேச சேலஞ்சர் பேட்மிண்டன் போட்டி டாக்காவில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்ஷயா சென் 22-20, 21-18 என்ற நேர் செட் கணக்கில் லியோங் ஜன் ஹாவை (மலேசியா) தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். கடைசியாக விளையாடிய 7 தொடர்களில் லக்ஷயா சென் வென்ற 5-வது பட்டம் இதுவாகும். இந்த சீசனை வெற்றியுடன் நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், புத்தாண்டிலும் இதே போன்று தொடர்ந்து சிறப்பாக விளையாட முடியும் என்று நம்புவதாகவும் 18 வயதான லக்ஷயா சென் தெரிவித்தார்.