TAMIL
வங்காளதேச தொடரில் கோலிக்கு ஓய்வு?
தென்ஆப்பிரிக்க தொடர் முடிந்ததும் வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் மற்றும் இரண்டு டெஸ்டுகளில் பங்கேற்கிறது. இந்தியா-வங்காளதேசம் இடையிலான 20 ஓவர் ஆட்டங்கள் முறையே டெல்லி (நவ.3), ராஜ்கோட் (நவ.7), நாக்பூர் (நவ.10) ஆகிய இடங்களில் நடக்கிறது.
இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளில் விளையாடுவதால் பணிச்சுமையை கருத்தில் கொண்டு வங்காளதேச 20 ஓவர் தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் முடிந்ததும் இது குறித்து கோலியிடம் தேர்வு குழுவினர் பேச உள்ளனர். தனது உடலுக்கு ஓய்வு தேவை என்று கோலி கேட்டால் ஓய்வு கொடுக்கப்படும். இந்த விஷயத்தில் அவரது விருப்பப்படி முடிவு எடுக்கப்படும் என்று தேர்வு குழு வட்டாரங்கள் தெரிவித்தன. வங்காளதேச தொடருக்கான இந்திய அணி வருகிற 24-ந்தேதி மும்பையில் அறிவிக்கப்படுகிறது.