CRICKETLATEST UPDATESNEWSTAMIL
வங்காளதேச கிரிக்கெட் தொடர்: 10 வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விலகல்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதையொட்டி வருகிற 10-ந்தேதி வங்காளதேசம் சென்றடையும் வெஸ்ட் இண்டீஸ் அணி ஜனவரி 20-ந்தேதி முதலாவது ஒரு நாள் போட்டியில் களம் இறங்குகிறது.
வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர், பொல்லார்ட், ஹெட்மயர், நிகோலஸ் பூரன், டேரன் பிராவோ, ஷாய் ஹோப், காட்ரெல் உள்பட 10 முன்னணி வீரர்கள் கொரோனா பயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக வங்காளதேச தொடரில் இருந்து விலகியுள்ளனர். இதனால் டெஸ்ட் அணிக்கு கிரேக் பிராத்வெய்டும், ஒரு நாள் போட்டி அணிக்கு ஜாசன் முகமதுவும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.