CRICKETLATEST UPDATESNEWSTAMIL
ரிஷப் பண்ட் தனது இயல்பான ஆட்டத்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை – புஜாரா
சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் புஜாரா நிதானமாக ஆடி அரை சதமடித்தார். அவர் 73 ரன்னில் வெளியேறினார். அவருடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி 91 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், ரிஷப் பண்ட் தனது இயல்பான ஆட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என புஜாரா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் புஜாரா கூறியதாவது:
அதிரடி ஆட்டம் ரிஷப் பண்டின் இயல்பான ஆட்டம். அதனால் அவரை நிறைய கட்டுப்படுத்த முடியாது. அவரால், பெரிதளவில் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்த முடியாது. ஏனென்றால், அவர் விரைவில் ஆட்டமிழந்து விடுவார். ஆனால், சில தருணங்களில் ஷாட்களை சரியாக தேர்வு செய்ய வேண்டும்.
எந்த ஷாட்களை விளையாட வேண்டும், எந்த ஷாட்களை விளையாடக் கூடாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ரிஷப் பண்ட் எப்போது நீண்ட நேரம் பேட் செய்தாலும் பெரிய ரன்களை அடித்துவிட்டே ஆட்டமிழக்கிறார். எனவே அவர் அதை நிச்சயம் உணருவார் என குறிப்பிட்டார்.