CRICKETLATEST UPDATESNEWSTAMIL

ராகுல் கூறிய வார்த்தைகளை என் வாழ்நாளில் மறக்கமாட்டேன் – ஆஸ்திரேலிய அணியின் அறிமுக வீரர் பேட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் குவித்தது.

அதன்பின்னர் 303 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும், தமிழக வீரரான நடராஜன் 2 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். ஆட்டநாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்வானார்.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக நடராஜன் அறிமுகமானது போல் ஆஸ்திரேலிய அணி சார்பாக இருபத்தொரு வயது ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் என்ற இளம் வீரர் அறிமுகமானார். தனது முதல் போட்டியிலேயே பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலுமே முறையான பங்களிப்பை அவர் அளித்தார். பவுலிங்கில் 4 ஓவர் வீசி விக்கெட் எடுக்காமல் 27 ரன்களை விட்டுக்கொடுத்த அவர் பேட்டியின் போதும் 27 பந்துகளில் ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 27 ரன்களை குவித்தார். இந்நிலையில் போட்டி முடிந்து தனது அறிமுக ஆட்டம் குறித்து பேசிய அவர் :

நான் அதற்கு ” சிறிது நடுக்கத்துடனே தான் விளையாடி வருகிறேன்” என்று அவருக்கு பதில் அளித்தேன். அதன்பின்னர் அவர் என்னை நோக்கி பயப்பட வேண்டாம் ” கோ வெல் யங்ஸ்டர்” என்று ஊக்கப்படுத்தும் ஒரு வார்த்தையை கூறினார். அது எனக்கு ஒரு பாஸிட்டிவ் எனர்ஜியை தந்தது. அவரின் இந்த வார்த்தையை நான் எப்பொழுதும் மறக்கமாட்டேன் என்னுள் அது பசுமையான நினைவாக இருக்கும் என கிரீன் கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் ராகுலின் இந்த செயலுக்கு இணையத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker