TAMIL

ரஞ்சி டிராபி போட்டியின் போது மைதானத்திற்குள் புகுந்த பாம்பால் போட்டி தாமதம்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 86வது ரஞ்சி டிராபி போட்டி இன்று தொடங்கியது. முதல் போட்டி ஆந்திர மாநிலத்திற்கும், விதர்பாவுக்கும் இடையே நடைபெறுகிறது.

டாஸ் வென்ற விதர்பா கேப்டன் பைஸ் பைசல், ஆந்திராவுக்கு எதிராக பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆந்திர மாநில அணிக்கு ஹனுமா விஹாரி கேப்டனாக உள்ளார்.


மைதானத்தில் இறங்கிய வீரர்கள் மைதானத்தில் பாம்பு ஊர்ந்து செல்வதை பார்த்தனர்.

இதனால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

உடனடியாக மைதான ஊழியர்கள் வந்து பாதுகாப்பாக பாம்பு அகற்றியவுடன், போட்டி மீண்டும் தொடங்கியது.

2019 கிரிக்கெட் உலகக் கோப்பையில், தென்னாப்பிரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஆட்டத்தை தேனீக்கள் கூட்டம் நிறுத்தியது.

இரு அணி வீரர்களும், நடுவர்களும் தரையில் படுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ரஞ்சி டிராபியின் போது பாலம் விமானப்படை மைதானத்திற்குள் கார் ஒன்று நுழைந்ததால் டெல்லி மற்றும் உத்தரபிரதேச போட்டி நிறுத்தப்பட்டது.

அப்போது அந்த போட்டியில் இஷாந்த் சர்மா, கவுதம் கம்பீர் மற்றும் ரிஷாப் பண்ட் போன்ற வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker