TAMIL

ரஞ்சி கிரிக்கெட்: மும்பை அணியின் ஆட்டம் மழையால் ரத்து

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் தர்மசாலாவில் நடந்து வரும் இமாச்சலபிரதேச அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி தொடக்க நாளில் 5 விக்கெட் இழப்புக்கு 372 ரன்கள் குவித்து இருந்தது.



சர்ப்ராஸ் கான் 226 ரன்களுடனும், சுபாம் ரஞ்சன் 44 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

2-வது நாளான நேற்று மழை பெய்ததால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

இந்தூரில் நடைபெறும் மத்தியபிரதேசம்-உத்தரபிரதேசம் அணிகள் இடையிலான ஆட்டத்தில் முதலில் ஆடிய மத்தியபிரதேச அணி முதல் இன்னிங்சில் 73 ஓவர்களில் 230 ரன்கள் எடுத்து ‘ஆல்-அவுட்’ ஆனது.

அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய உத்தரபிரதேச அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 22 ரன்கள் எடுத்து இருந்தது.



2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய உத்தரபிரதேச அணி முதல் இன்னிங்சில் 53 ஓவர்களில் 216 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. சவுரப் குமார் 98 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த மத்தியபிரதேச இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ரவி யாதவ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

14 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய மத்தியபிரதேச அணி நேற்றைய முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்துள்ளது.

சண்டிகாரில் நடக்கும் புதுச்சேரிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் ஆடிய சண்டிகார் அணி முதல் இன்னிங்சில் 37.3 ஓவர்களில் 134 ரன்னில் சுருண்டது.

பின்னர் ஆடிய புதுச்சேரி அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்திருந்தது.



அங்கு பெய்த மழை காரணமாக நேற்றைய ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker