TAMIL
ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி அறிவிப்பு
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்து இருக்கும் தமிழக அணி இதுவரை 6 ஆட்டத்தில் விளையாடி ஒரு வெற்றி, 2 தோல்வி, 3 டிரா கண்டுள்ளது.
தமிழக அணி அடுத்து வரும் லீக் ஆட்டங்களில் பரோடா (பிப்ரவரி 4-7), சவுராஷ்டிரா (பிப்ரவரி 12-15) அணிகளை எதிர்கொள்கிறது.
பரோடா, சவுராஷ்டிரா அணிகளுக்கு எதிரான போட்டிக்கான தமிழக அணியை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்வு கமிட்டி நேற்று அறிவித்துள்ளது.
அணியின் கேப்டனாக பாபா அபராஜித் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அணி வீரர்கள் வருமாறு:-
பாபா அபராஜித் (கேப்டன்), அபினவ் முகுந்த் (துணை கேப்டன்), தினேஷ் கார்த்திக், சூர்ய பிரகாஷ், கவுசிக் காந்தி, பாபா இந்திரஜித்,
ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), சாய் கிஷோர், சித்தார்த், நடராஜன், முகமது, அபிஷேக் தன்வார், கங்கா ஸ்ரீதர் ராஜூ, முகுந்த், விக்னேஷ்.