TAMIL

‘ரசிகர்கள் இன்றி ஐ.பி.எல். போட்டியை நடத்தலாம்’ – பாண்ட்யா யோசனை

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, சக வீரர் தினேஷ் கார்த்திக்குடன் நடத்திய இன்ஸ்டாகிராம் உரையாடலின் போது கூறுகையில், ‘இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியை ரசிகர்கள் இன்றி பூட்டிய ஸ்டேடியத்தில் நடத்தினாலும் பரவாயில்லை தான்.

ஆனால் அது வித்தியாசமானதாக தான் இருக்கும்.

மைதானத்தில் ரசிகர்கள் இருந்தால் தான் போட்டிக்குரிய உணர்வு வரும். ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் இன்றி விளையாடி இருக்கிறேன்.

அது வித்தியாசமான அனுபவம்.

உண்மையாக சொல்லப்போனால் ஐ.பி.எல். போட்டி ரசிகர்கள் இன்றிய பூட்டிய ஸ்டேடியத்தில் அரங்கேறினால் அது சிறந்த முடிவாகவே இருக்கும்’ என்றார்.

கடந்த ஆண்டு (2019) நடந்த ‘காபி வித் கரண்’ டெலிவிஷன் நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்ட்யா கலந்து கொண்ட போது பெண்கள்

குறித்து இழிவாக பேசியதால் இடைநீக்கம் மற்றும் அபராதத்தை சந்தித்த அனுபவம் குறித்து கேட்ட போது, ‘தற்போது நான் காபி குடிப்பது கிடையாது.

அதற்கு பதிலாக கிரீன் டீ தான் குடிக்கிறேன். நான் ஒரே ஒரு முறை காபி குடித்தது, அதிக செலவீனமாகும் என்பதை எனக்கு நிரூபித்து விட்டது.

‘ஸ்டார்பக்ஸ்’ கடையில் கூட அவ்வளவு அதிக விலை கொண்ட காபி இருக்காது.

அந்த சம்பவத்தில் இருந்து நான் காபியை விட்டு விலகி விட்டேன்’ என்று பதிலளித்தார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker