TAMIL

மேற்கிந்திய தீவுகளுடன் மோத 20 பேர் கொண்ட முதற்கட்ட அணி விபரத்தை வெளியிட்டது இலங்கை

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களில் விளையாட 20 பேர் கொண்ட முதற்கட்ட அணியை இலங்கை தேர்வாளர்கள் தேர்வு செய்துள்ளனர்.

இம்மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, 3 ஒரு நாள் மற்றும் 2 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.


3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பெப்ரவரி 22ம் திகதி தொடங்கும், 2 போட்டிகள் டி-20 தொடர் மார்ச் 4ம் திகதி தொடங்கும்.

திமுத் கருணாரத்னே மற்றும் லசித் மலிங்க ஆகியோர் முறையே ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் இலங்கை அணியை வழி நடத்துவார்கள் என கூறப்படுகிறது.

உத்தியோகபூர்வ அணி குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், போட்டிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பேர் கொண்ட முதற்கட்ட அணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடைசியாக ஜூலை, 2019ல் இலங்கைக்காக விளையாடிய திசாரா பெரேரா 20 உறுப்பினர்கள் அடங்கிய முதற்கட்ட அணியில் இடம் பிடித்துள்ளார்.


20 பேர் கொண்ட முதற்கட்ட அணி பின்னர் அது 15 ஆக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் முதற்கட்ட அணி விபரம்:

  • குசால் பெரேரா
  • அவிஷ்கா பெர்னாண்டோ
  • தனுஷ்க குணதிலக
  • நிரோஷன் டிக்வெல்லா
  • ஏஞ்சலோ மேத்யூஸ்
  • தனஞ்சய டி சில்வா
  • குசால் மெண்டிஸ்
  • தாசுன் சானக்க
  • திசாரா பெரேரா
  • வனிது ஹசரங்க
  • பானுகா ராஜபக்ச
  • ஒஷாடா பெர்னாண்டோ
  • லக்ஷன் சந்தகன்
  • லஹிரு குமாரா
  • லசித் மலிங்கா
  • கசுன் ராஜித
  • ஷெஹான் ஜெயசூரியா
  • நுவான் பிரதீப்
  • இசுரு உதனா
  • மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

    Related Articles

    Close

    Adblock Detected

    Please consider supporting us by disabling your ad blocker