TAMIL
முற்றிய வார்த்தை மோதல்…! மைதானத்திலே மோதிக்கொண்ட இங்கிலாந்து- தென் ஆப்பரிக்கா வீரர்கள்
ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் தென் ஆப்பரிக்கா அணித்தலைவர் டுபிளெசிஸ், இங்கிலாந்து வீரர் பட்லர் ஆகியோர் நேருக்கு நேர் மோதிக்கொண்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து 3-1 என்ற வெற்றி கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது இங்கிலாந்து.
ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் மெதுவாக பந்து வீதத்திற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, தென் ஆப்பரிக்கா வீரர்களின் போட்டி சம்பளத்தல் 60% அபராதம் விதித்துள்ளது.
மேலும், போட்டியின் போது இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லருடன் உடல் ரீதியான மோதலில் ஈடுபட்டதற்காக தென் ஆப்பரிக்கா அணித்தலைவர் டுபிளெசிஸ் மேலும் சிக்கல்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
போட்டியின் 57வது ஓவரின் போது பீல்டங்கில் ஈடுபட்ட சாம் குர்ரன் வீசிய பந்து துடுப்பாடிய டுபிளெசிஸ் மீது தாக்கியுள்ளது. இதனால், இங்கிலாந்து பீல்டர்களுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன் போது இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட், டுபிளெசிஸை திட்டியதாக கூறப்படுகிறது.
கோபடைந்த டுபிளெசிஸ், பிராட் அருகே சென்ற போது பட்லர் குறுக்கிட்டு சமாதானப்படுத்த முயன்றுள்ளார், இதன்போது பட்லர்-டுபிளெசிஸ் மோதியுள்ளனர். கடைசியில் இங்கிலாந்து அணித்தலைவர் குறுக்கிட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்துள்ளார்.
போட்டிக்கு பின் பேட்டியளித்த டுபிளெசிஸ், பட்லருக்கும் தனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், அவர் சமாதானப்படுத்த முயன்ற போது மோதியதாக விளக்கமளித்துள்ளார்.
#SAvsENG #ProteaFire don’t call our skipper that!!☝? pic.twitter.com/dzUECGbIS0
— Thabiso Mazibuko (@therealThabiso1) January 27, 2020