CRICKETIPL TAMILLATEST UPDATESNEWSTAMIL
மும்பை இந்தியன்ஸ் மனது வைத்தால் 2 அணிகளுக்கு எளிதாக பிளேஆஃப்ஸ் வாய்ப்பு
ஐ.பி.எல். தொடரின் ஒவ்வொரு சீசனிலும் பெரும்பாலான அணிகள் முன்னதாகவே பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறிவிடும். இதனால் கடைசி இரண்டு அல்லது மூன்று போட்டிகள் வெற்றி அல்லது தோல்வி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதால் விளையாடி ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாடப்படும்.
ஆனால் இந்த சீசனில் அப்படி இல்லை. இரண்டு போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே 9 வெற்றிகளுடன் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஆர்சிபி, டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 வெற்றிகளுடனும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 6 வெற்றிகளுடன் பிளேஆஃப்ஸ் சுற்றுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.
இன்று ஆர்சிபி – டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றிபெறும் அணி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறும்.
தோல்வியுறும் அணியும், கொல்கத்தாவும் 14 புள்ளிகள் பெற்றிருக்கும். நாளை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாட இருக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி அல்லது ஆர்சிபி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறும்.
ஒருவேளை ஐதராபாத் அணி வெற்றி பெற்றால் கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். ஒருவேளை கொல்கத்தாவுடன் குறைவான ரன் இருந்தால் இன்றைய போட்டியில் தோல்வியடையும் அணி வெளியேறும்.
டெல்லி கடந்த நான்கு போட்டிகளில் தோல்வியை சந்ததித்துள்ளது. ஆர்சிபி 3 தோல்வியை சந்தித்துள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் நான்கில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.