CRICKETLATEST UPDATESNEWSTAMIL

முதல் டெஸ்ட் போட்டி: வெஸ்ட் இண்டீசுக்கு 375 ரன் இலக்கு – இலங்கை புதுமுக வீரர் சதம்

முதல் டெஸ்ட் போட்டி: வெஸ்ட் இண்டீசுக்கு 375 ரன் இலக்கு - இலங்கை புதுமுக வீரர் சதம்

வெஸ்ட் இண்டீஸ் இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இலங்கை முதல் இன்னிங்சில் 169 ரன்னில் சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 271 ரன் எடுத்தது. 102 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன் எடுத்து இருந்தது.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 153 ரன்கள் முன்னிலை, கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் இலங்கை தொடர்ந்து ஆடியது.

அந்த அணி 476 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு 375 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இலங்கை புதுமுக வீரர் பதும் நிசன்கா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். தனது முதல் டெஸ்டிலேயே அவர் செஞ்சுரி அடித்து சாதித்தார். 6-வது வீரராக ஆடிய நிசன்கா 103 ரன்னும், டிக்வெலா 96 ரன்னும், பெர்னாண்டோ 91 ரன்னும், திரிமானே 76 ரன்னும், தனஞ்செய டி சில்வா 50 ரன்னும் எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேமர் ரோச், கார்ன்வால் தலா 3 விக்கெட்டும் , கெய்ல் மேயர்ஸ் 2 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

375 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 34 ரன் எடுத்து இருந்தது.

கேம்பெல் 11 ரன்னில் பெர்னாண்டோ பந்தில் ஆட்டம் இழந்தார். பிராத் வெயிட் 8 ரன்னும், போனெர் 15 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker