CRICKETLATEST UPDATESNEWSTAMIL

முதல் டெஸ்ட்: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை 101 ரன்னில் வீழ்த்தியது நியூசிலாந்து

நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மவன்ட் மவுங்கானுயில் நடைபெற்றது. கடந்த 26-ந்தேதி பாக்சிங் டே டெஸ்டாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. கேன் வில்லியம்சன் 129 ரன்கள் அடிக்க நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 431 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி 4 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 239 ரன்னில் சுருண்டது. 192 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. டாம் லாதம் 53 ரன்களும், டாம் பிளன்டல் 64 ரன்களும் அடிக்க 180 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

ஒட்டுமொத்தமாக 372 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் 373 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து, பாகிஸ்தான் அணி நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்திருந்தது. 
அசார் அலி 34 ரன்களுடனும், ஃபவத் அலாம் 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. அசார் அலி 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஃபவத் அலாம் உடன் முகமது ரிஸ்வான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் சிறப்பாக விளையாடியது. எவ்வளவு தாக்குப்பிடிக்க முடியுமோ, அந்த அளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது.

இவர்கள் இருவரும் விளையாடியதை பார்க்கும்போது போட்டி டிராவை நோக்கி சென்றது. அணியின் ஸ்கோர் 240 ரன்கள் இருக்கும்போது ரிஸ்வான் 60 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார் ரிஸ்வான் 191 பந்துகள் சந்தித்தார்.

எதிர்முனையில் விளையாடிய ஃபவத் அலாம் சதம் அடித்தார். ஆனால் 102 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அலாம் 269 பந்துகள் சந்தித்தார். இந்த ஜோடி 63.2 ஓவர்கள் எதிர்கொண்டது. 240, 242 ரன்களுகளில் அடுத்தத்த முக்கிய விக்கெட்டை பாகிஸ்தான் இழந்ததால் தடுமாற ஆரம்பித்தது.

யாசிர் ஷா 0 ரன்னிலும், முகமது அப்பாஸ் 1 ரன்னிலும் வெளியேறினர். பாகிஸ்தான் அணி 123.3 ஓவரில் 9 விக்கெட்டை இழந்தது. 10-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா தாக்குப்பிடித்து விளையாட முடிவு செய்தனர்.

ஐந்து ஓவர்களை தாக்குப்பிடித்து விட்டால் போட்டியை டிரா செய்து விடலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் முதல் ஓவரிலேயே நசீம் ஷா ஆட்டமிழந்தார். இதனால் நான்கு ஓவர் மீதமுள்ள நிலையில், நியூசிலாந்து த்ரில் வெற்றி பெற்றது.
Related Tags :

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker