TAMIL
மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் டிவில்லியர்சை சேர்க்க பேச்சுவார்த்தை – டு பிளிஸ்சிஸ் தகவல்

* அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்சை மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வைக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தென்ஆப்பிரிக்க கேப்டன் டு பிளிஸ்சிஸ் கூறியுள்ளார்.
இதன் மூலம் டிவில்லியர்ஸ் அடுத்த ஆண்டு நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
*ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய குத்துச்சண்டை அணியை தேர்வு செய்வதற்காக நடக்கும் தகுதி போட்டியை டெலிவிஷனில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்.
அப்போது தான் தகுதி போட்டி நேர்மையாக நடக்கும் என்று இந்திய இளம் குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் வலியுறுத்தியுள்ளார்.
*20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு 4 மாதங்களுக்கு முன்பே இந்திய அணி தயாராக இருக்க வேண்டும்.
அதாவது அணியில் இடம் பெறும் 16 அல்லது 14 வீரர்கள் அடையாளம் காணப்பட்டிருக்க வேண்டும்’ என்று இந்திய முன்னாள் வீரர் யுவராஜ்சிங் கூறியுள்ளார்.
* கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியில் இருந்து இந்திய முன்னாள் வீரர்கள் கபில்தேவ், அன்ஷூமான் கெய்க்வாட் ஆகியோர் விலகி விட்ட போதிலும் இரட்டை ஆதாய பிரச்சினை குறித்து இந்த மாத இறுதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரிய நன்னடத்தை அதிகாரி டி.கே.ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.