TAMIL
மீண்டும் கிரிக்கெட்டில் களமிறங்கிய இலங்கை ஜாம்பவான்கள் தில்ஷன், முரளிதரன்! ரசிகர்கள் உற்சாகம்
இந்தியாவின் இரு நகரங்களில், சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர் என்ற பெயரில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு
நடத்தப்படும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த கிரிக்கெட் தொடரில் இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜாம்பவான்கள்
பங்கேற்கின்றனர்.
சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், திலகரத்னே தில்ஷன், முத்தையா முரளிதரன், லாரா, சந்தர்பால், பிரெட்லீ, ஜான்டி ரோட்ஸ்
உள்ளிட்ட 110 முன்னாள் வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த போட்டியின் மூலம் கிடைக்கும் வருவாய், இந்தியாவின் சாலை பாதுகாப்பு பிரிவுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர் பிப்ரவரி 2ஆம் திகதி தொடங்கியது, 16ஆம் திகதி வரை நடக்கவுள்ள கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளது.
இந்த தொடரை மகாராஷ்டிர மாநிலத்தில் சாலை பாதுகாப்பு துறையும் , சந்த் பாரத் சுரக்ஷித் பாரத் என்ற அமைப்பும் இணைந்து நடத்துகிறது.
இந்த போட்டியின் போட்டியின் மூலம் கிடைக்கும் வருவாய், சாலை பாதுகாப்பு பிரிவுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தொடருக்கு டைட்டில் ஸ்பான்சராக “Unacademy ” என்ற நிறுவனம் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.