சன்ரைசர்ஸ் ஐதராபாத்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 3-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.
நிதிஷ் ராணா, ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஷுப்மான் கில் 15 ரன்னில் ஆட்டடமிழந்தார். அடுத்து நிதிஷ் ராணா உடன் ராகுல் திரிபாதி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சன்ரைசர்ஸ் ஐதாராபாத் பந்து வீச்சை துவம்சம் செய்தது.
அணியின் ஸ்கோர் 15.2 ஓவரில் 146 ரன்னாக இருக்கும்போது திரிபாதி 29 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எளிதாக 200 ரன்னைத் தாண்டுவது போல் இருந்தது.
ஆனால் அந்த்ரே ரஸலை (5) ரஷித் கானும், மோர்கன் (2) மற்றும் நிதிஷ் ராணாவை (80) முகமது ரபியும் வீழ்த்த கொல்கத்தாவின் ரன் வேகம் குறைந்தது. தினேஷ் கார்த்திக் 9 பந்தில் 22 ரன்கள் அடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 188 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
ரஷித் கான் 4 ஓவரில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், முகமது நபி 4 ஓவரில் 32 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.