CRICKETLATEST UPDATESNEWSTAMIL
மஸ்கெலியாவில் 15 பேருக்கு கொரோனா தொற்றுறுதி..!
மஸ்கெலியா பிரதேசத்தில் 15 கொரோனா தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக, மஸ்கெலியா பொதுசுகாதார வைத்திய அதிகாரி துரைசாமிபிள்ளை சந்ரராஜன் தெரிவித்தார்.
பேலியாகொட மீன்சந்தையோடு தொடர்புடைய 07 முன்னர் மஸ்கெலியாவில் கொவிட்19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், இன்று காலை மேலும் 8 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கொவிட்19 பரவல்அச்சுறுத்தல் அதிகம் இருக்கின்ற மாவட்டங்களில் இருந்து யாரும் மலையகப் பகுதிகளுக்கு தற்போது செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் மஸ்கெலியா பொதுசுகாதார வைத்திய அதிகாரி துரைசாமிபிள்ளை சந்திரராஜன் அறிவுறுத்தியுள்ளார்.