TAMIL
மவுனத்தை கலைத்த திருமதி. Kobe Bryant! உருக வைத்த பதிவு
முன்னணி கூடைப்பந்து வீரர் Kobe Bryant மறைவிற்கு பின், அவரது மனைவி முதல் முறையாக கணவன் மற்றும் மகள் குறித்து பகிர்ந்துள்ளார்.
Kobe Bryant கடந்த ஞாயிற்று கிழமை ஹெலிகாப்படர் விபத்தில், 13 வயது மகள்Giannaவுடன் மரணத்தை தழுவினார்.
உலகம் முழுவதும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவம் விளையாட்டு ரசிகர்கள் பலரை அதிர்ச்சிக்குள்ளாகியது.
Kobe Bryant அமெரிக்கா கூடைப்பந்து விளையாட்டு அணியில் இடம் பிடித்து 2001ஆம் ஆண்டும் Vanessa என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு Natalia (17), Gianna13, Bianka(3), Capri(7month) என்று நான்கு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இவர்களில், Giannaவுடன் ஹெலிகாப்டரில் சென்றபோது Kobe Bryant உயிரிழந்தார்.
இந்நிலையில், இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள Kobe Bryant மனைவி, “எங்களுக்காக நீங்கள் இறைவனிடம் வேண்டி கொண்டமைக்கு மிக்க நன்றி. மில்லியன் கணக்கான மக்கள் எங்களை நேசித்து இந்த சூழலில் ஆதரவளித்துள்ளீர்கள்.
இந்த திடீர் இழப்பு எங்களை அழிய செய்தது போல் உள்ளது. Kobe எங்கள் குழந்தைகளுக்கு சிறந்த தந்தையாக இருந்தார். அதேபோல் Gianna சிறந்த மகளாகவும், Natalia, Bianka, மற்றும் Capri ஆகியோருக்கு சிறந்த சகோதரியாகவும் இருந்தார்.
எங்கள் வாழ்க்கையில் தனியுரிமையுடன் நாங்கள் இனி வாழ விரும்புகிறோம். அதற்கு உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், Kobe Bryant-ன் Mamba Sports Foundationக்கு தேவையான நிதியை தந்து உதவுமாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்