TAMIL

மலையில் நின்று செல்பி எடுக்கும் போது கீழே விழுந்து உயிரிழந்த பிரபல கிரிக்கெட் வீரர்! தந்தை இறந்த 2 வாரத்தில் சோகம்

பிரபல கிரிக்கெட் வீரர் சேகர் கவ்லி செல்பி எடுக்கும் போது நிலைதடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

ரஞ்சி கிரிக்கெட் போட்டிகள் பலவற்றில் பங்கேற்று விளையாடியவர் சேகர் கவ்லி.

இவர் மகாராஷ்டிரா ரஞ்சி அணியின் உடற்பயிற்சி பயிற்சியாளராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் மகாராஷ்டிராவின் இகட்புரியில் உள்ள மலைபிரதேசத்துக்கு சேகர் சென்றுள்ளார்.

அங்கு தனது செல்போனில் செல்பி எடுத்து கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்த சேகர் உயிரிழந்தார். அவரின் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.

சேகரின் தந்தை இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் உயிரிழந்தார், அந்த சோகத்தில் இருந்தே குடும்பத்தார் இன்னும் மீளாத நிலையில் அவரும் திடீரென இறந்தது குடும்பத்தாரை பெரும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

திறமையான வலது கை துடுப்பாட்ட வீரராகவும், சுழற்பந்து வீச்சாளராகவும் திகழ்ந்த சேகரின் மறைவுக்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker