TAMIL
மறக்க முடியாத நான்கு பேர்: புகழ்பெற்ற நாட்களை நினைவுகூர்ந்த கங்குலி!
சிறப்பு புகைப்படத்தில் இந்தியாவின் அற்புதமான நான்கு பக்கங்களும் இருந்தன, ‘இன்னும் சின்னமான நால்வரை பெயரிடுங்கள், நாங்கள் காத்திருப்போம் என கிரிக்கெட்டின் பைபிள் என அழைக்கப்படும் விஸ்டன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த நால்வர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
புகைப்படத்தை பகிர்ந்தது மட்டுமல்லாமல் இந்த நால்வரை விட தலைச்சிறந்தவர்கள் யார் ? பொறுத்திருப்போம் என பதிவிட்டிருந்தது.
இதனை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த சவுரவ் கங்குலி,
என் வாழ்வின் மிகச் சிறந்த தருணம், அதன் ஒவ்வொரு நிகழ்வையும் எண்ணி மகிழ்ச்சியடைகிறேன், எனத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டணி ஏறக்குறைய 10 ஆண்டுகாலம் ஒன்றாக கிரிக்கெட் விளையாடினார்கள்.
ஓய்வுக்குப் பிறகு, நால்வரும் தனித்தனி வழிகளில் சென்றுள்ளனர், ஆனால் இன்னும் அவர்களை ஒன்றாகக் கொண்டுவந்த விளையாட்டோடு இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கூட்டணியில் முதலில் ஓய்வுப் பெற்ற சவுரவ் கங்குலி. இப்போது பிசிசிஐ தலைவராக இருக்கிறார்.
பின்பு விவிஎஸ் லட்சுமணன், ராகுல் டி ராவிட் மற்றும் இறுதியாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப்பெற்று நிறைய மனிதாபிமானப் பணிகளைச் செய்து வருகிறார்.
கங்குலி தலைமையிலான ஒருநாள் கிரிக்கெட் அணி 2003-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.