TAMIL
மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகே ஐ.பி.எல். குறித்து பேச முடியும் – ரோகித் சர்மா சொல்கிறார்
இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோகித் சர்மா, ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் சக வீரர் யுஸ்வேந்திர சாஹலுடன் கலந்துரையாடினார்.
அப்போது ஐ.பி.எல். போட்டி எப்போது நடத்தப்படும் என்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ரோகித் சர்மா பதில் அளித்து கூறியதாவது:-
‘நாம் முதலில் நாட்டை பற்றிதான் யோசிக்க வேண்டும்.
கொரோனாவினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு சீராக வேண்டியதே இப்போது முக்கியம். அதன் பிறகே ஐ.பி.எல். கிரிக்கெட் பற்றி பேச முடியும்.
முதலில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பட்டும்.
ஊரடங்கு உத்தரவால் மும்பை நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது.
இதற்கு முன்பு மும்பையை இப்படி பார்த்ததில்லை. ஒரு கிரிக்கெட் வீரராக குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்காது.
எப்போதும் கிரிக்கெட் தொடர், வெளிநாட்டு பயணம் என்று இருந்து கொண்டே இருக்கும்.
குடும்பத்தினருடன் உற்சாகமாக பொழுதை கழிக்க இதுவே சரியான தருணம். இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.