TAMIL
பொல்லார்டின் ஐபிஎல் அனுபவம் வான்கடேயில் பந்து வீச்சாளர்களுக்கு பயனளிக்கும்: பயிற்சியாளர்
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டம் வெல்லும்.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தை மும்பை இந்தியன்ஸ் அணி பயன்படுத்தி வருகிறது. அந்த அணியில் பொல்லார்டு நீண்ட காலமாக விளையாடி வருகிறார். அந்த அனுபவம் பந்து வீச்சாளர்களுக்கு பலனை கொடுக்கும் என வெஸ்ட் இண்டீஸ் அணி பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பொல்லார்டு கூறுகையில் ‘‘மும்பை வான்கடே மைதானத்தில் பொல்லார்டு அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ளார். மற்ற வீரர்கள் அந்த அளவிற்கு விளையாடவில்லை.
அந்த அனுபவத்தை மற்ற வீரர்கள் பெற்றுக்கொள்வது விலைமதிப்பற்றதாகும். குறிப்பாக கேப்டன் பொல்லார்டிம் இருந்து. அவர் வான்கடேயில் 10 ஆண்டுகளாக விளையாடி வருகிறார்’’ என்றார்.