TAMIL
பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி
பிரிஸ்பேனில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி, வெஸ்ட்இண்டீசை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ஷிகா பாண்டே 24 ரன் எடுத்தார்.
பின்னர் 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 105 ரன்களே எடுத்தது.
இதனால் இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி ஓவரில் வெஸ்ட்இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது.
அந்த ஓவரை பூனம் யாதவ் வீசினார். அவர் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
அடிலெய்டில் நடந்த மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை எளிதில் தோற்கடித்தது.
இன்னொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.