TAMIL
பெண்கள் டி20 கிரிக்கெட் ; நியூசிலாந்துக்கு 134 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
இதில், குரூப் – ஏ பிரிவில் இன்று நடைபெற்ற 9 வது லீக் ஆட்டத்தில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசத்தொடங்கியது.
இதன்படி, முதலில் பேட்டிங்கை துவங்கிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து, 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.