CRICKETIPL TAMILLATEST UPDATESNEWSTAMIL
பெண்கள் சேலஞ்ச் கிரிக்கெட் : ‘ஹாட்ரிக்’ பட்டம் வெல்லுமா சூப்பர் நோவாஸ்?
3-வது பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள வெலோசிட்டி, சூப்பர் நோவாஸ், டிரைல் பிளாசர்ஸ் அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதின. லீக் முடிவில் மூன்று அணிகளும் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் சமநிலை வகித்தன. ரன்ரேட் அடிப்படையில் சூப்பர் நோவாஸ், டிரைல் பிளாசர்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் மகுடத்துக்கான இறுதிஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான நடப்பு சாம்பியன் சூப்பர் நோவாசும், ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான டிரைல் பிளாசர்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன. தொடர்ந்து 3-வது முறையாக (ஹாட்ரிக்) பட்டம் வெல்ல முனைப்பு காட்டி வரும் சூப்பர் நோவாஸ் அணி பேட்டிங்கில் சமாரி அட்டப்பட்டு, ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோரைத் தான் அதிகமாக சார்ந்து இருக்கிறது. ஏற்கனவே லீக்கில் 2 ரன் வித்தியாசத்தில் பிளாசர்சை பதம் பார்த்து இருப்பதால் மிகுந்த நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள்.
டிரைல் பிளாசர்ஸ் அணியில் டியாந்த்ரா டோட்டின், கேப்டன் மந்தனா, தீப்தி ஷர்மா, உலகின் ‘நம்பர் ஒன்’ சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன், வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி நல்ல பார்மில் உள்ளனர். இரு அணிகளும் சரிசம பலத்துடன் மோதுவதால் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.