தென்ஆப்ரிக்காவை சேர்ந்த அதிரடி கிரிக்கெட் வீரரான அப் தே வில்லியர்ஸ் ஐ.பி.எல். இருபது ஓவர் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
கடந்த 2011ம் ஆண்டில் இருந்து அந்த அணியில் விளையாடி வரும் வில்லியர்ஸ் இன்றைய போட்டியில் சாதனை ஒன்றை நிகழ்ச்சியுள்ளார்.
ஐ.பி.எல்.லின் இன்றைய போட்டியில் வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்தது.
இதனை தொடர்ந்து, தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய பெங்களூரு அணியின் ஆரோன் பின்ச் மற்றும் தேவ்தத் பதிக்கல் ஆகியோர் இருவரும் முதல் விக்கெட் இழப்புக்கு முன் 90 ரன்கள் சேர்த்தனர்.
பதிக்கல் 36 பந்துகளில் அரை சதம் பூர்த்தி செய்து அசத்தியுள்ளார்.
பின்ச் அதிரடியாக 2 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து 29 ரன்கள் எடுத்து அசத்தினார். கேப்டன் விராட் கோலி 14 ரன்களில் வெளியேறினார்.
இதன்பின்னர் விளையாடிய பெங்களூரு அணியின் அப் தே வில்லியர்ஸ் 30 பந்துகளை சந்தித்து 51 ரன்களை எடுத்து அரை சதம் விளாசினார்.
இவற்றில் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும். எனினும் போட்டியில் அவர் ரன்அவுட் முறையில் வெளியேறினார்.
இந்த போட்டியில் வில்லியர்ஸ் 2 சிக்சர்களை அடித்தபோதிலும், பெங்களூரு அணிக்காக 200வது சிக்சரை அடித்து சாதனை படைத்து உள்ளார்.
இதனால் சக வீரர்களின் பாராட்டு மழையில் அவர் நனைந்துள்ளார். இதேபோன்று வில்லியர்சின் ரசிகர்களும் அதிகளவு மகிழ்ச்சியில் உள்ளனர்.