CRICKETLATEST UPDATESNEWSTAMIL
பும்ரா பந்தில் அடிவாங்கிய ஜோ பேர்ன்ஸ் மெல்போர்ன் டெஸ்டில் விளையாட தகுதி
![](https://iespnsports.com/wp-content/uploads/2020/12/202012201610475818_Tamil_News_India-vs-Australia-Opener-Joe-Burns-Cleared-to-Play-For_SECVPF.jpg)
ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது. 90 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜோ பேர்ன்ஸ் ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் அடித்து வெற்றிக்கு உதவியாக இருந்தார்.
அவர் விளையாடும்போது பும்ரா திடீரென வீசிய பவுன்சர் பந்து முழங்கையை பலமாக தாக்கியது. வலி தாங்க முடியாமல் மருத்துவ உதவி மேற்கொண்டார். கையில் முறிவு ஏற்பட்டிருக்குமோ? என ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பயப்படக்கூடிய அளவிற்கு ஒன்றுமில்லை என்பதால் மெல்போர்ன் டெஸ்டில் விளையாட தகுதி பெற்றார்.