TAMIL
புதிய வரலாற்று சாதனை படைக்க உள்ள ராஸ் டெய்லர்
இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்குவதன் மூலம், நியூசிலாந்து அணியின் மூத்த வீரர் ராஸ் டெய்லர் வரலாற்று சாதனை படைக்க உள்ளார்.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியானது நாளை வெலிங்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் களமிறங்குவதன் மூலம் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய அனைத்து விதமான போட்டிகளிலும் தலா 100 ஆட்டங்களை கடந்தவர் என்கிற புதிய வரலாற்று சாதனையை படைப்பார்.
35 வயதான ராஸ் டெய்லர் தற்போது நியூசிலாந்து அணிக்காக சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார்.
நடந்து முடிந்த ஒருநாள் போட்டியில் அவருடைய ஆட்டம் சிறப்பாக இருந்தபோதிலும் கூட, மற்ற வீரர்கள் பெரிய அளவிற்கு சோபிக்க தவறியதால் அந்த அணி தொடரை இழந்தது.
ஆனால் அதனை தொடர்ந்து நடைபெற்ற டி20 தொடரில், ராஸ் டெய்லருடன் இணைந்து மற்ற வீரர்களும் சிறப்பாக விளையாடியதால் அந்த அணி தொடரை கைப்பற்றி அசத்தியிருந்தது.