CRICKETIPL TAMILLATEST UPDATESNEWSTAMIL
புஜாராவை ரூ. 50 லட்சத்திற்கு சிஎஸ்கே எடுக்க, ஏலம் நடைபெற்ற அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது


ஐபிஎல் 2021 சீசனுக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்திய டெஸ்ட் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேனான புஜாரா, ஐபிஎல் போட்டியில் விளையாட ஆர்வமாக உள்ளார். இருந்தாலும் அவர் கடந்த சில சீசனில் எந்த அணியும் ஏலம் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. டி20 போட்டிக்கு நான் சரியான நபர். என்னால் அதிரடியாக விளையாட முடியும். டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தபின்னர் என்னுடைய ஸ்டிரைக் ரேட்டை பாருங்கள் என்று புஜாரா கூறியபோதும், அணியில் சேர்க்க எந்த உரிமையாளரும் தயாராக இல்லை.
இந்த நிலையில் இன்றைய ஏலத்தின்போது புஜாரா பெயர் அறிவிக்கப்பட்டு 50 லட்சம் ரூபாய் அடிப்படை விலையில் ஏலம் விடப்பட்டது. அவரை யார் எடுப்பார்கள்? என்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அடிப்படை விலையான 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
புஜாராவை 50 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தைரியத்தை அங்கிருந்த மற்ற அணியைச் சேர்ந்தவர்கள் கைத்தட்டி பாராட்டினர். அதத்துடன் பிசிசிஐ அதிகாரிகளும் கைத்தட்டு சென்னை அணிக்கு பாராட்டு தெரிவித்தனர்.