FOOTBALLLATEST UPDATESNEWSTAMIL

பீலேவின் சாதனையை முறியடித்த மெஸ்சி

ஸ்பெயினில் பிரபலமான லா லிகா கால்பந்து போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பார்சிலோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் ரியல் வல்லாடோலிட்டை வீழ்த்தி 7-வது வெற்றியை சுவைத்தது. 65-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரரும், அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவருமான லயோனல் மெஸ்சி ஒரு கோல் அடித்தார். பார்சிலோனா கிளப்புக்காக மெஸ்சி அடித்த 644-வது (749 ஆட்டம்) கோல் இதுவாகும். இதன் மூலம் ஒரே கிளப்புக்காக அதிக கோல்கள் அடித்தவரான பிரேசில் ஜாம்பவான் பீலேவின் சாதனையை மெஸ்சி முறியடித்தார். பீலே, பிரேசிலைச் சேர்ந்த சான்டோஸ் கிளப்புக்காக மட்டும் 643 கோல்கள் (656 ஆட்டம்) 1956-ம் ஆண்டு முதல் 1974-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அடித்திருந்தார். அவரது 46 ஆண்டு கால சாதனைக்கு மெஸ்சி இப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பார்சிலோனா கிளப்புக்காக கடந்த 17 ஆண்டுகளாக விளையாடி வரும் 33 வயதான லயோனல் மெஸ்சிகூறுகையில், ‘நான் கால்பந்து விளையாடத் தொடங்கிய போது எந்த ஒரு சாதனையையும் தகர்ப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் பிலேவின் சாதனையை கடப்பேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை. இத்தனை ஆண்டுகள் எனக்கு பக்கபலமாக இருந்த அணியின் சக வீரர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் இந்த சமயத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker