CRICKETLATEST UPDATESNEWSTAMIL
பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் அறிமுகம்
ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றது. 3-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
4-வது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேன் நகரில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும். பிரிஸ்பேன் கபா மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல.
பொதுவாக போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே இரு அணிகளும் ஆடும் லெவன் அணியை அறிவித்துவிடும்.
இந்திய அணியில் விஹாரி, ஜடேஜா விளையாடாதது உறுதி செய்யப்பட்ட ஒன்று. ஆனால் பும்ரா, அஸ்வின் ஆகியோரும் இடம்பெறுவார்களா? என்பதுதான் கேள்வியாக இருந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் களம் இறங்குகிறார். மேலும் சுழற்பந்து வீச்சாளராக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் கடைசி டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.