TAMIL
பிரபல கிரிக்கெட் வீரர் சென்ற கார் மற்றொரு வாகனத்துடன் மோதி கவிழ்ந்து விபத்து
மேற்கிந்திய தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் ஓஷேன் தாமஸ் மோசமான கார் விபத்தில் இருந்து உயிர்தப்பி, தற்போது காயங்களிலிருந்து மீண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜமைக்காவின் செயின்ட் கேத்தரின் நெடுஞ்சாலை 2000 இல் தாமஸ் விபத்தில் சிக்கினார்.
பெப்ரவரி 16 ஞாயிற்றுக்கிழமை மற்றொரு வாகனத்துடன் மோதியதில் தாமஸ் ஓட்டி வந்த ஆடி கார் கவிழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிர்ஷ்டவசமாக சுயநினைவுடன் காணப்பட்ட தாமஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
வாகன விபத்தில் சிக்கிய மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஜமைக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஓஷேன் தாமஸிக்கு மேற்கிந்தி தீவுகள் வீரர்கள் சங்கம் அனுதாபங்கள் தெரிவித்துள்ளது என்று மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேற்கிந்தி தீவுகள் வீரர்கள் சங்கம்த்தின் நிர்வாகி மற்றும் ஊழியர்கள் ஓஷானுக்கு அனுதாபங்களைத் தெரிவிக்க விரும்புகிறார்கள்.
அவர் விரைவாக மற்றும் முழுமையாக குணமடைய வேண்டும் என விரும்புவதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தாமஸ் கடைசியாக அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பெப்ரவரி 22 முதல் தொடங்கும் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் இருந்து 23 வயதான வேகப்பந்து வீச்சாளர் தாமஸ் வெளியேற்றப்பட்டார்.
ஐபிஎல் 2020 மார்ச் 29 முதல் தொடங்க உள்ள நிலையில் தாமஸின் காயம் குறித்து ராஜஸ்தான் ராய்லாஸால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.