TAMIL

பிரதமர் மோடி குறித்த அப்ரிடி விமர்சனம்: இனி அவருக்கு ஆதரவில்லை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆவேசம்

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிக்குச் சமீபத்தில் சென்ற ஷாகித் அப்ரிடி உலகமே கொரோனா எனும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது, இதை விட மோசமானது மோடியின் மனமும் இதயமும். காஷ்மீரில் 7 லட்சம் ராணுவத்தினரை குவித்துள்ளார் என கூறினார்

இதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும் எம்.பியுமான காம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்

கம்பீர் இது தொடர்பாக ஏ.என்.ஐ. க்கு அளித்த பேட்டியில் சிலருக்கு வயதுதான் ஆகிறதே தவிர மனத்தளவில் வளர்ச்சி ஏற்படுவதில்லை. அப்ரிடி இப்போதுதான் 16 வயது நபர் போல் பேசுகிறார்.

உலகமே கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கும்போது காஷ்மீர் பற்றி பேசுகிறார் பிரதமர் மோடியைப் பற்றி அவதூறாகப் பேசுகிறார், இது உங்களுடைய உங்கள் நாட்டுடைய எண்ணங்களை வெளிப்படுத்துகிறது. இது துரதிர்ஷ்டமானது.

பாகிஸ்தானில் ஒருவர் மீது வெளிச்சம் விழ வேண்டுமென்றால் இந்தியாவையும் பிரதமரையும் திட்டினால் போதும். ஏழைகளுக்கு உணவு கொடுக்கச் சென்று விட்டு இப்படிப் பேசலாமா? உங்கள் நாட்டு நிலையை பாருங்கள், அங்கு பணம் இல்லை மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் அரசியல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.
கொரோனா காலத்திலும் எல்லை வழியாக பயங்கரவாதிகளை அனுப்புகிறீர்கள். கொரோனா காலத்திலும் உங்கள் நாடு எல்லை தாண்டிய பயங்கரவாதம் செய்து வருகிறது.

கிரிக்கெட்டில் கூட உங்களை யாரும் சீரியசாகப் பேசுவதில்லை, இப்போது இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருந்தால் உங்களை யாரும் மதிக்கப்போவதில்லை என்று அப்ரிடிக்கு கடுமையாகப் பதிலடி கொடுத்தார்.

இதனையடுத்து யுவராஜ் சிங், மோடிக்கு எதிரான அப்ரிடியின் கருத்தை ஏற்க முடியாது. மனித நேய அடிப்படையில்தான் அவரது முயற்சிக்கு உதவச்சொன்னேன் இனி ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம் என்று டுவீட் செய்ய இதனை மறுட்வீட் செய்த ஹர்பஜன் சிங் ஆம் இனி ஒருபோதும் இவருக்கு ஆதரவு கிடையாது என்று டுவீட் செய்துள்ளார்.

இது போல் ஷிகர் தவானும் தனது கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker