TAMIL

பிரச்சினை வேண்டாம்..! நியூசிலாந்தில் செய்தியாளரிடம் கொந்தளித்த கோஹ்லி: வைரலாகும் வீடியோ

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் தோல்விக்கு பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்திய அணித்தலைவர் கோஹ்லி கோபமாக பேசியது வைரலாகியுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை 2-0 என கைப்பற்றி நியூசிலாந்து இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது.



போட்டிக்கு பின் இந்திய அணித்தலைவர் கோஹ்லி செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டார்.

சந்திப்பில், போட்டியின் போது வில்லயம்சன் அவுட் ஆனவுடன் அவரையும், ரசிகர்களையும் நோக்கி நீங்கள் மரியாரையில்லாத வகையில் நடந்துக்கொண்டது குறித்து உங்களின் கருத்து என்ன?

களத்தில் ஒரு நல்ல உதாரணமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? என்ற செய்தியாளர் கோஹ்லியிடம் கேள்வி எழுப்பினார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என கோஹ்லி செய்தியாளரிடம் கேள்வி கேட்டார். நான் உங்களிடம் கேள்வி கேட்கிறேன் என செய்தியாளர் பதிலளித்தார்.

நான் உங்களிடம் பதிலை கேட்கிறேன் என கோஹ்லி மீண்டும் செய்தியாளரிடம் கேள்வி கேட்டார். நீங்கள் ஒரு சிறந்த உதாரணமாக இருக்க வேண்டும் என செய்தியாளர் கூறினார்.

இதற்கு பதிலளித்த கோஹ்லி, உண்மையில் என்ன நடந்தது என முதலில் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும், பின் கேள்விகளை கேளுங்கள்.



பாதி விவரங்களை மட்டும் தெரிந்துக்கொண்டு கேள்வி எழுப்ப வேண்டாம். மேலும், நீங்கள் பிரச்சினை செய்ய வேண்டும் என்றால், இது அதற்கான இடமில்லை.

நடந்து குறித்து போட்டி நடுவரிடம் பேசிவிட்டேன். அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நன்றி என கோஹ்லி கோபத்துடன் பதிலளித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker