TAMIL

பிசிசிஐ வெளியிட்டுள்ள வருடாந்திர வீரர்களுக்கான ஒப்பந்தப் பட்டியலில் தோனியின் பெயர் இல்லை

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது அதில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை.

விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா ஆகியோர் ஏ பிளஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளனர்.

ஏ பிளஸ், ஏ, பி மற்றும் சி என நான்கு பிரிவுகளின்கீழ் வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.



2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2020-ம் ஆண்டு செப்டம்பர் வரையிலான காலகட்டத்துக்கான ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது.

ஏ பிளஸ் கிரேடு ஒப்பந்தத்தில் இருப்பவர்களுக்கு ஊதியமாக ரூ.7 கோடி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

ஏ பிளஸ் கிரேடு ஒப்பந்தத்தில்

1.விராட் கோலி
2.ரோஹித் ஷர்மா
3.ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் உள்ளனர்.

ஏ கிரேடு ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்களுக்கு ரூ.5 கோடி ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.



கிரேடு ஏ ஒப்பந்தத்தில்

1.ரவிச்சந்திரன் அஷ்வின்
2.ரவீந்திர ஜடேஜா
3.புவனேஷ்வர் குமார்
4.புஜாரா
5.அஜிங்கியா ரஹானே
6.கே.எல்.ராகுல்
7.ஷிகர் தவான்
8.முகமது ஷமி
9.இஷாந்த் ஷர்மா
10.குல்தீப் யாதவ்
11.ரிஷப் பண்ட் ஆகியோர் உள்ளனர்.

பி பிரிவு ஒப்பந்தத்தில் இருப்பவர்களுக்கு ரூ.3 கோடி ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.



கிரேடு பி ஒப்பந்தத்தில்

1.விருத்திமான் சாஹா
2.உமேஷ் யாதவ்
3.யுஷ்வேந்திர சாஹல்
4.ஹர்திக் பாண்டியா
5.மயங்க் அகர்வால் ஆகியோர் உள்ளனர்.

சி பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

கிரேடு சி ஒப்பந்தத்தில்

1.கேதர் ஜாதவ்
2.நவ்தீப் சைனி
3.தீபக் சஹார்
4.மணீஷ் பாண்டே
5.ஹனும விஹாரி
6.ஷ்ரதுல் தாக்குர்
7.ஸ்ரேயாஸ் ஐயர்
8.வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உள்ளனர்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker