TAMIL
பிசிசிஐ மீது உள்ள களங்கத்தை துடைக்க எனக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும் -கங்குலி பேட்டி
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, பிசிசியின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்வாகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. பிசிசிஐயின் தலைவர் மற்றும் பிற பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கங்குலிக்கு பெரும்பாலான நிர்வாகிகள் மத்தியில் ஆதரவு காணப்படுகிறது. இதனால், கங்குலி அப்பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.