CRICKETLATEST UPDATESNEWSTAMIL
பிங்க்-பாலில் அச்சுறுத்தலாக விளங்கும் மிட்செல் ஸ்டார்க்: இந்தியா சமாளிக்குமா?
ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் நாளை அடிலெய்டில் நடக்கிறது. இந்த டெஸ்ட் பகல்-இரவு டெஸ்டாக பிங்க்-பாலில் நடக்கிறது.
ஆஸ்திரேலியா இதுவரை விளையாடியுள்ள பிங்க் பால் போட்டியில் தோல்வியை சந்தித்தது கிடையாது. இந்தியா வங்காளதேசத்திற்கு எதிராக மட்டுமே விளையாடியுள்ளது.
ஒயிட்பால் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் நேர்த்தியாக பந்து வீசவில்லை. மேலும், குடும்ப உறுப்பினருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தொடரில் இருந்து வெளியேறினார்.
தற்போது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் இணைந்துள்ளார். பிங்க்-பால் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் எப்படிபட்டவர் என்பதை அவரது சாதனையே கூறும். ஆம்…. 7 போட்டிகளில் 42 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஒரு போட்டிக்கு சராசரியாக 6 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்த சராசரி 19.23 ஆகும்.
அதனால் நாளைய போட்டியிலும் இந்தியாவுக்கு கடும் அச்சுறுத்தலாக இருப்பார் எனக் கருதப்படுகிறது.