CRICKETLATEST UPDATESNEWSTAMIL
பாவம் புவி: 2021 ஐபிஎல் சீசன் வரை போட்டி கிரிக்கெட்டில் பங்கேற்க வாய்ப்பில்லை
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவர். பந்து ஸ்விங் ஆகும் ஆடுகளத்தில் இவரது பந்தை எதிர்கொள்வது மிகக்கடினம். ஒரே நேரத்தில் இன் ஸ்விங், அவுட் ஸ்விங் செய்யும் திறமை வாய்ந்த வீரர் என்பதால், இந்திய அணியின் வெளிநாட்டு தொடர்களின்போது முக்கிய பவுலராக திகழ்வார்.
மேலும், பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்திலும் புதுப்பந்தில் ஸ்விங் செய்யக்கூடியவர். ஆனால், கடந்த இரண்டு வருடமாக முதுகுவலி, இடிப்பு வலி, ஹாம்ஸ்டிரிங் காயம் என முக்கியமான போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
ஐந்து போட்டிகள் கொண்ட இங்கிலாந்து தொடரில் இந்தியா 1-4 எனத் தோல்வியடைந்தது. இந்தத் தொடரில் புவனேஷ்வர் குமார் இல்லாதது அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தது. இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்ற போதும் அவர் அணியில் இல்லை. கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரிக்குப்பின் அவர் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை.
உடற்தகுதி பெற்று ஐபிஎல் தொடரில் விளையாடினார். அக்டோபர் 2-ந்தேதி நடைபெற்ற ஆட்டத்தின்போது காயம் ஏற்பட்டு வெளியேறினார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீள்வதற்கான சிகிச்சையுடன் கூட பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
தற்போது அவருக்கு உண்டான இடுப்பு வலி காயத்திற்காக அடுத்த மாதம் வரை தேசிய அகாடமியில் சிகிச்சை மேற்கொள்கிறார். இந்த காயத்திற்கு ஆறு மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டுமாம். இதனால் உத்தர பிரதேச சையத் முஷ்டாக் அலி டிராபிக்கான அணியில் தேர்வாகவில்லை.
புவனேஷ்வர் குமாரால் ஆறு மாத்திற்கு போட்டி கிரிக்கெட்டில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஐபிஎல் போட்டி தொடங்குவதாக கூறப்படுகிறது.
30 வயதாகும் புவனேஷ்வர் குமார் 21 டெஸ்ட், 114 ஒருநாள், 43 டி20 போட்டிகளில் விளையாடி முறையே 6, 132, 41 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
கடைசியாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் 2018 ஜனவரி மாதம் விளையாடினார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமும், டி20 போட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும் விளையாடியுள்ளார்.