CRICKETLATEST UPDATESLEAGUESNEWSTAMIL
பாகிஸ்தான் சூப்பர் லீக்: கராச்சி கிங்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆண்டுதோறும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை நடத்து வருகிறது. பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இந்தத் தொடர் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிந்து பிளேஆஃப்ஸ் சுற்று தொடங்கும்போது கொரோனா தாண்டவம் ஆடியது.
இதனால் தொடர் நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதனடிப்படையில் பிளேஆஃப்ஸ் சுற்று ஆட்டங்கள் நேற்றில் இருந்து மீண்டும் தொடங்கியது.
குவாலிபயைர் 1-ல் முல்தான் சுல்தான் – கராச்சி கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய முல்தான் சுல்தான் 141 ரன்கள் அடித்தது. போபரா அதிகபட்சமாக 40 ரன்கள் அடித்தார். அதன்பின் 142 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கராச்சி கிங்ஸ் களம் இறங்கியது.
தொடக்க வீரர் பாபர் அசாம் 65 ரன்கள் அடித்தார். இருந்தாலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் எடுக்க இறுதிக் கட்டத்தில் கராச்சி கிங்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களே அடித்தது. இதனால் போட்டி டை ஆனது.
இதனால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. கராச்சி கிங்ஸ் 13 ரன்கள் அடித்தது, பின்னர் முல்தான் சுல்தான் அணி 8 ரன்களே அடித்ததால் கராச்சி கிங்ஸ் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
எலிமினேட்டர் 1-ல் லாகூர் குவாலண்டர்ஸ் – பெஷாவர் சல்மி அணிகள் மோதின. இதில் லாகூர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எலிமினேட்டர் 2-க்கு முன்னேறியது. இதில் முல்தான் சுல்ததான் – லாகூர் குவாலண்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.