CRICKETLATEST UPDATESNEWSTAMIL
பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் போட்டி: நியூசிலாந்து அணி அறிவிப்பு – ரோஸ் டெய்லர் நீக்கம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. 20 ஓவர் தொடர் வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் கேப்டன் ரோஸ் டெய்லர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
வில்லியம்சன், போல்ட் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். வில்லியம்சன் முதல் போட்டியில் ஆட மாட்டார். 2-வது மற்றும் 3-வது போட்டிக்கு கேப்டனாக இருப்பார். முதல் ஆட்டத்தில் சான்ட்னெர் கேப்டனாக பணியாற்றுவார்.
இதற்கிடையே கொரோனா பாதுகாப்பு கட்டுப்பாடு காரணமாக நியூசிலாந்து பயணத்தில் இருந்து விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிஸ்பா-உல்-ஹக் தெரிவித்துள்ளார்.