CRICKETLATEST UPDATESNEWSTAMIL

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: நியூசிலாந்து ரன் குவிப்பு

நியூசிலாந்து -பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட் சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 297 ரன் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 286 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் வில்லியம்சன் 112 ரன்னும், ஹென்றி நிக்கோல்ஸ் 89 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. 11 ரன்கள் பின்தங்கி கைவசம் 7 விக்கெட் என்ற நிலையில் நியூசிலாந்து தொடர்ந்து ஆடியது.

நிக்கோல்ஸ் மிகவும் சிறப்பாக ஆடி சதம் அடித்தார். 212 பந்துகளில் 10 பவுண் டரியுடன் 100 ரன்னை தொட் டார். 37-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 7-வது சதமாகும்.

ஸ்கோர் 440 இருந்தபோதுதான் இந்த ஜோடி பிரிந்தது. நிக்கோல்ஸ் 157 ரன்னில் முகமது அப்பாஸ் பந்தில் அவுட் ஆனார். 4-வது விக்கெட் ஜோடி 369 ரன் குவித்தது முக்கியமானதாகும். அடுத்து வாட்லிங் களம் வந்தார்.

நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 447 எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. அப்போது வில்லியம்சன் 177 ரன்னுடனும், வாட்லிங் 3 ரன்னுடனும் இருந்தனர்.

மழை விட்ட பிறகு போட்டி தொடங்கியதும் வாட்லிங் 7 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து மிச்சேல் ஆட வந்தார். மறுமுனையில் இருந்த வில்லியம்சன் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். 327 பந்தில் 24 பவுண்டரியுடன் அவர் 200 ரன்னை தொட்டார்.

இதேபோல மிச்சேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனையடுத்து நியூசிலாந்து அணி 659 ரன்கள் எடுத்த நிலையில் கேப்டன் வில்லியம்சன் டிக்ளேர் செய்ததாக அறிவித்தார்.

இதனையடுத்து பாகிஸ்தான் அணி களமிறங்கியது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட்டை இழந்து 8 ரன்கள் எடுத்திருந்தனர்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker