TAMIL

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்டில் இருந்து நட்சத்திர வீரர் விலகல்.. இலங்கை அணிக்கு பலத்த அடி

கராச்சியில் நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இருந்து இலங்கை வேகப்பந்து வீச்சாளர் கசுன் ராஜிதா விலகியுள்ளார்.

இச்செய்தியை இலங்கை கிரிக்கெட் அணி மேலாளரும் தேர்வாளருமான அசாந்தா டி மெல் உறுதிப்படுத்தியுள்ளார்.

ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்டின் போது ராஜிதாவுக்கு இடது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



ராஜிதாவுக்கு பதிலாக இலங்கையிலிருந்து மாற்று வீரர் அழைக்க படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரிங்கா லக்மல் டெங்குவால் பாதிக்கப்பட்ட பின்னர் கடைசி நிமிடத்தில் சுற்றுப்பயணத்திலிருந்து விலகியதால், ராஜிதா இல்லாத இலங்கை அணி அனுபவமற்ற வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கவுள்ளது.

ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இருக்கும் தொடரின் இறுதி டெஸ்டில் பந்து வீச்சாளர்களுக்கு பலம் சேர்க்க லஹிரு குமாரா, விஸ்வா பெர்னாண்டோவுடன் அறிமுக வீரர் அசிதா பெர்னாண்டோ இணைவார் என கூறப்படுகிறது.



அவ்வாறு விளையாடினால் இது அசிதா பெர்னாண்டோவிற்கு முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வியாழக்கிழமை கராச்சியில் நடைபெறுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker